திருச்சி,திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 உதவி ஆணையர்கள் இடமாற்றம்
திருச்சி, திருவானைக்கோவில் ஜெம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் உதவி ஆணையர் ஆ.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து அரசு முதன்மை செயலாளர் பி. சந்திரமோகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது. , அரியலூர் இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றும் என்.நாகராஜ், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையராகவும், ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் உதவி ஆணையராக பணியாற்றும் பா.பாஸ்கரன், சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக உதவி ஆணையராகவும் திருச்சி, திருவானைக்கோவில் ஜெம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் உதவி ஆணையராக பணியாற்றும் ஆ.ரவிச்சந்திரன், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராகவும், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றும் சு.கவிதா சிவகங்கை மாவட்ட உதவி ஆணையராகவும், திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையராக பணியாற்றும் வே.சுரேஷ், திருச்சி திருவானைக்கோவில் ஜெம்புகேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையராகவும், பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையர் சு.சுவாமிநாதன், நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராகவும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையராக பணியாற்றும் ந.யக்ஞநாராயணன் குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோவில் உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.