சேலம் மாவட்டம் மேட்டூரில் துணை தாசில்தாராக நர்மதா பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் மணிகண்ட சபரி மேட்டூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது நர்மதா திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நர்மதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நர்மதாவுக்கு மனஅழுத்தம் இருந்ததாகவும், இதற்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தார். எனினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.