ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்…
திருச்சி மாநகர காவல் ஆணையர் தகவல்..
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நாளை ( 23.12.2023) அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று 22.12.2023-ம் தேதி மதியம் 2 மணி முதல் 24.12.2023-ம் தேதி மதியம் 2 மணி வரை திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்துகள் அண்ணாசிலை, காவிரி பாலம், மாம்பழச்சாலை, திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு, காந்தி ரோடு – JAC கார்னர், EVS சாலை வழியாகச் சென்று ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட வேண்டும். பின்பு ஸ்ரீரங்கத்திலிருந்து அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவிரி பாலம், ஓடத்துறை, சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகரப் பேருந்துகள் அண்ணாசிலை, காவிரி பாலம், மாம்பழச்சாலை, திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு, சோதனை சாவடி எண்.6, கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம், சோதனை சாவடி எண்.6, திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு, காந்தி ரோடு, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், அம்மா மண்டபம், மாம்பழச்சாலை, காவிரி பாலம் – சத்திரம் பேருந்து , நிலையம் செல்ல வேண்டும். பெரம்பலூர், அரியலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகரப் பேருந்துகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகவே சென்று வர வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் முக்கிய நபர்கள் காவிரி பாலம் வழியாக மாம்பழச்சாலை, அம்மாமண்டபம் ரோடு, ராகவேந்திரா ஆர்ச், பீட்-38 வந்து மேலவாசல் வழியாக தெற்கு சித்திரை வீதியில் உள்ள வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே திரும்பிச் செல்ல வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு பெற்று கார்களில் வரும் பக்தர்கள், காவிரி பாலம்,
மாம்பழச்சாலை சந்திப்பு, திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு, காந்திரோடு வந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள புதிய வாகன நிறுத்துமிடத்தில் கார்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் JAC கார்னர், EVS சாலை, ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம், அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவிரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
சென்னை, சேலம், அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கார்கள்
“Y” ரோடு சந்திப்பு, பஞ்சக்கரை ரோடு, தசாவதார சன்னதி, மேலூர் ரோடு, மேலவாசல் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவிரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும். கரூர் மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்களின் கார்கள் அண்ணாசிலை, காவிரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு, சோதனை சாவடி எண்.6, பஞ்சக்கரை ரோடு, தசாவதார சன்னதி, மேலூர் ரோடு வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவிரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்களின் கார்கள் பால்பண்ணை, சஞ்சீவிநகர் சந்திப்பு, “Y” ரோடு சந்திப்பு, பஞ்சக்கரை ரோடு, தசாவதார சன்னதி, மேலூர் ரோடு வழியாக மேலவாசல் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் ராகவேந்திரா ஆர்ச், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, காவிரி பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும். மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்களின் பேருந்துகள் பால்பண்ணை, சஞ்சீவிநகர் சந்திப்பு, “Y” ரோடு சந்திப்பு, காவல் சோதனை சாவடி எண்.6, பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.சென்னை, அரியலூர், சேலம், மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்களின் பேருந்துகள்
“y” ரோடு சந்திப்பு, பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும்.
கரூர் மார்க்கத்திலிருந்து வரும் பக்தர்களின் பேருந்துகள் அண்ணாசிலை, ஓடத்துறை பாலம், ஓயாமாரி ரோடு, சென்னை பைபாஸ், சஞ்சீவிநகர் சந்திப்பு, “Y” ரோடு சந்திப்பு, காவல் சோதனை சாவடி எண்.6 -, பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் வெளியே செல்ல வேண்டும். வேன்களில் வரும் பக்தர்கள் காவிரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு, காந்திரோடு வழியாக நெல்சன் ரோட்டில் உள்ள சிங்கபெருமாள் கோயில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பிச் செல்ல வேண்டும்.
மேற்கண்டவாறு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்காக பொதுமக்களின் நலன்கருதி, மேற்கண்ட வாகன போக்குவரத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பை நல்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் என். காமினி ஐபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.