Rock Fort Times
Online News

ஒகேனக்கல் மலைப் பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது: மருத்துவ ஊழியர் குடும்பத்தினர் 35 பேர் காயம்…

விழுப்புரம் மாவட்ட சுகாதார துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடும்பத்தினர் சுற்றுலா பேருந்து ஒன்றில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றனர். இன்று ( 09.12.2023 ) காலை ஒகேனக்கல் மலைப்பாதையில் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், பலத்த காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக ஒகேனக்கல் மலைப்பாதையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்