மக்களின் தாகம் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைப்பு- * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தணிக்க உதவிடுமாறு திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன், மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் மலைக்கோட்டை பகுதியில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார் . இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு மதிவாணன் மற்றும் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.