குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று(07-03-2024) வெளியானது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி வணிகவரி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடந்தது. இந்த தேர்வை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதி இருந்தனர். இந்நிலையில் இன்று குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/English/latest_results.aspx?c=4593 என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம்.தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.