திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார் கோவில் உள்ளது. நேற்று இரவு பூசாரி, கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், இன்று காலை கோவிலை திறக்க வந்த பொழுது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு, உண்டியலும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி, உடனடியாக உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.