ரூ.5 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்- திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை…!
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான பிரதீப்குமாருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அந்தவகையில், தேர்தல் முடியும் வரை இனி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல முடியாது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மற்றும் கமிஷன் தரகு மண்டி நடத்தும் வியாபாரிகள் தங்கள் கடைக்கு வரும் விவசாய பொருட்கள், காய்கறி போன்றவற்றிற்கு விவசாயிகளுக்கு ரொக்கமாக பணம் பட்டுவாடா செய்து வருகின்றோம். மேலும், வெளியூர்களுக்கு அனுப்பும் காய்கறிகளுக்கு வாரத்தில் ஒருமுறை நேரில் சென்று பணத்தை வசூல் செய்து வருகிறோம். எனவே, வியாபாரிகள் ரூ.5 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதித்து அதற்கு உண்டான அனுமதி அட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.