Rock Fort Times
Online News

‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்… திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி..!

அண்ணாமலை, பாட்ஷா உள்பட சுமார் 400க்கும் மேலான படங்களின் இசையமைப்பாளர் தேவா காலமானார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். கடந்த 1989ம் ஆண்டு வெளிவந்த ‘மனசுக்கேத்த மகாராசா’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா, பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்குத் தனித்த ரசிகர் பட்டாளம் இருந்தது. கானா பாடல்களை திரையுலகில் மைய நீரோட்டப்படுத்தியதில் தேவா முக்கியமானவராக அறியப்படுகிறார். தன்னை கானா பாடல்களோடு முத்திரை குத்துவது பற்றி தேவா பல இடங்களில் பேசியிருந்தாலும் அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கானா பாடல்கள், மெலடி பாடல்கள், பின்னணி இசை, ஹீரோ அறிமுகப் பாடல்கள் எனப் பல ஜானர்களில் அவர் தடம் பதித்துள்ளார். அவர் தனது திரைப்படங்கள் மட்டுமல்லாது பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது மறைவு தமிழ் திரை உலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்