Rock Fort Times
Online News

10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக வந்த வாட்ஸ்-ஆப் குறுஞ்செய்தி தவறானது- திருச்சி மாநகராட்சி விளக்கம்…!

நீதிமன்ற உத்தரவுப்படி,  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் உதவித் தொகை வழங்கப்படுவதாக வாட்ஸ்-ஆப்-ல் குறுஞ்செய்தி பல பேருக்கு வந்துள்ளதாக தெரிகிறது.  இதற்கு மறுப்பு தெரிவித்து திருச்சி மாநகராட்சி  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில்,  நீதிமன்ற உத்தரவு திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுக்கா, அக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் கோவில் திருவிழாவிற்கான காவல் துறை பாதுகாப்பு தொடர்பானதாகும். பொதுமக்களுக்கு அலைபேசியில் வந்துள்ள வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தியில் மாநகராட்சி நிர்வாகத்தால் எந்தவித  உதவித்தொகையும் வழங்குவதாக அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இதனால், பொதுமக்கள் அனைவரும் உதவித்தொகை சம்பந்தமாக மாநகராட்சியை தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும், உண்மையற்ற செய்திகளைப் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்