Rock Fort Times
Online News

10 மணி நேரமா சபை நடக்குது… மக்களுக்கு தேவையான எதுவும் இல்லை…* சபாநாயகரை நோக்கி சரமாரி கேள்வி..!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆக்கப்பூர்வமான கருத்து இருந்தா பரவாயில்லை. நேரலையில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தே.மு.தி.க தலைவர் சொன்னது போல பயனுள்ள கருத்து எதுவும் இல்லை. காலை 10 மணி நேரம் அவை நடக்கும் என்று சொன்னீர்கள். அதில் பயனுள்ள கருத்து எவ்வளவு நேரம் பேசினோம். சட்டமன்றம் என்பது மிகப்பெரிய சட்டம் இயற்றக் கூடிய மாமன்றம். ஆனால்,மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிக நேரம் கொடுப்பதில்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.

பிரேமலதா விஜயகாந்த்,

தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த்
பேசுகையில், ஒவ்வொரு உறுப்பினரும் மக்களுக்காக பேச வேண்டும், மக்கள் பிரச்சனைக்காக பேச வேண்டும் என்று இரவு, பகலா கேள்விகளை தயார் செய்து வருகிறோம். ஆனால் இங்கு வந்து பார்த்தால் ஏறக்குறைய 1 மணி நேரம் தான் மக்களை பற்றி பேசுகிறார்கள். மீதி நேரம் சண்டை தான் போடுகிறார்கள். நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது சட்டசபையா சண்டை சபையா? என்று மக்கள் கேட்கிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் நடக்கிறது சட்டசபை. நமது தனிப்பட்ட சண்டைக்காக சட்டசபையை பயன்படுத்தக் கூடாது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்