Rock Fort Times
Online News

சட்டப்பேரவையில் தனது இருக்கையில் அமராமல் அந்த மூத்த அமைச்சருடன் அமர்ந்த முதல்வர் விஜய்…!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலுரை வழங்கி வருகின்றனர். புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேபாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பது தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக முதல்வர் சென்று விட்டதால் இன்று(27-08-2026) காலை அவர் பேரவையில் கலந்து கொள்ளவில்லை. மாலை சட்டப்பேரவைக்கு வருகை தந்து கலந்து கொண்டார். அப்போது, முதல்-அமைச்சருக்கென ஒதுக்கப்பட்டு இருக்கும் தனது இருக்கையில் அமராமல், அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்து
கொண்டார். குறிப்பாக. அமைச்சர் செங்கோட்டையன் அருகில் அமர்ந்த விஜய், அவரிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் விஜய் ஏன் இடம் மாறி அமர்ந்துள்ளார் என அங்கிருந்த பிற அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்