தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேர வெப்பத்தின் தாக்கம் இரவிலும் கடும் புழுக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மின்விசிறி இல்லாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க முடிவதில்லை. ஆனால், திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவு 10 மணிக்கு மின்தடை ஏற்பட்டால் விடியற்காலை வரை மின்சாரம் வருவதில்லை. இதுதொடர்பாக மன்னார்புரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் எங்க லிமிட்டில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, உங்கள் ஏரியாவில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். பொன்மலைப்பட்டி ஏரியா மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயன்றால் சரியான பதில் இல்லை. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாரும் தூங்க முடியவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே, பொன்மலை பட்டியில் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.