எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108 -வது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருவெறும்பூர் பெல் நிறுவன நுழைவு வாயிலில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலைக்கு, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கலைப் பிரிவு செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் சுபத்ரா தேவி சுப்ரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர். எஸ் எஸ்.ராவணன், துவாக்குடி நகர அவை தலைவர் சுரேஷ், நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், துணை செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் செந்தில்குமார், கூத்தைப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணி, திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர்சுவாமிநாதன் முருகானந்தம், தண்டபாணி, வக்கீல்கள் சின்னத்துரை, கணேசன், கூத்தைப்பார் பேரூராட்சி முன்னாள் தலைவர் தனபால், துவாக்குடி நகராட்சி கவுன்சிலர் சாருமதி, வேங்கூர் தங்கமணி, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஆர்டிஸ்ட் தேவகுமார், நவல்பட்டு பாலமூர்த்தி, காட்டூர் அம்மன் மணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொய்கைகுடி முருகா, 41- வது வட்டச் செயலாளர் அபிமன்யு, தகவல் தொழில் நுட்ப அணி ஜெயந்தி, மகளிர் அணி நந்தினி சத்தியமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவெறும்பூர் கடைவீதியில் 40- வது வட்டச் செயலாளர் ரோஷன் தலைமையில் எம்ஜிஆர் படத்திற்கு ப.குமார் மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் அவைத்தலைவர் சுவாமிநாதன், கே.என்.ரமேஷ், மலைக்கோயில் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.