பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு ( வயது 20). இவரது தாய் பிரதிமாதேவி (43). இவர்கள் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தனது தாயை கொன்ற ஹிமான்ஷு, அவரது சடலத்தை ஒரு சூட்கேசில் திணித்து திரிவேணி சங்கமத்தில் உடலை வீச முடிவு செய்து ரயிலில் எடுத்து வந்துள்ளார். அப்போது போலீசாருக்கு ஹிமான்ஷு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 13-ந்தேதி ஹிமான்ஷு, அவரது தாயிடம் ரூ.5 ஆயிரம் கேட்டதாகவும் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொன்றதாகவும் தெரிவித்தார். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். தாயை கொன்று உடலை சூட்கேசில் திணித்து ரயிலில் எடுத்து வரப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.