திருமாவளவன் உள்பட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உட்பட 49 எதிர்க்கட்சி எம்.பி.க்களை மக்களவையிலும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்கள் என மொத்தம் 141எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று ( 20.12.2023 ) திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர மற்றும் கிழக்கு மாவட்டம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு மாநகா் மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினாா்.
இதில் திருச்சி-கரூர் மண்டல பொறுப்பாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளரும், மாநகர உறுப்பினருமான பிரபாகரன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, இளம் சிறுத்தைகள் பாசறையின் மாநில நிர்வாகி அரசு, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில நிர்வாகி காட்டூர் பெரோஸ்கான், அஸ்ரப் அலி, மாவட்ட பொருளாளர் சந்தனமொழி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஞானம், ஆல்பர்ட்ராஜ், ஆல்பர்ட் ஹென்றி, சரவணன், காதர்,பீர்,சேகர், மாரிமுத்து, கார்த்தி மணவாளன், தீனா மற்றும் கட்சியினர் மணி, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.