Rock Fort Times
Online News

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊரான காணக்கிளிய நல்லூரில் களைகட்டிய கும்பாபிஷேக விழா..!

தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரான கே.என்.நேருவின் சொந்த ஊர் லால்குடி அருகே உள்ள காணக்கிளிய நல்லூர். இவ்வூரில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நல்ல செல்லாண்டியம்மன்,ஸ்ரீ சாஸ்தா மற்றும் அனைத்து பரிவார தெய்வங்கள் அடங்கிய ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா பிப்ரவரி 6ம் தேதியான இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.

இதில் அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, ட்ரூ வேல்யு ஹோம்ஸ் நிர்வாக இயக்குனர் கே.என்.ரவிச்சந்திரன், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்