திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், மஞ்சம்பட்டி அருகே உள்ள தீராம்பட்டி மலையாண்டி தெரு பகுதியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாசம் (54)வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. அருள் பிரகாசம் மணப்பாறை மலையாண்டி தெரு பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். சோதனையின்போது மணப்பாறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற ஒரு நாள் இருக்கும் நிலையில் இந்த திடீர் சோதனை மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.