ரூ.28.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி மைய அலுவலக நுழைவுவாயில்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் ரூ.28.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நுழைவுவாயிலை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழா இன்று(16-02-2026) நடைபெற்றன. அந்தவகையில் திருச்சி மாநகராட்சி
மைய அலுவலக நுழைவு வாயில் ரூ.28.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இதனை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.