Rock Fort Times
Online News

ரியாத்தில் உயிரிழந்த நர்ஸ் உடல் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தது- ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைப்பு…!

கோயம்புத்தூர் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள கள்ளி மேடு செந்தூர் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி அமுதா. இவர் சவுதிஅரேபியா ரியாத் நகரில் உள்ள  மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றி வந்தார். அவர், நவம்பர் 5-ந்தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த அவரது குடும்பத்தினர் உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், எம்.பி.க்கள் கலாநிதி வீராச்சாமி , எம்.எம்.அப்துல்லா மற்றும் மயிலாடுதுறை வெங்கடேசன், திருச்சி ஆரிப் உள்ளிட்டோர் ரியாத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் ஜமால் சேட்டுவை தொடர்பு கொண்டு பேசினர். அவரது தீவிர முயற்சியின் காரணமாக சவுதி அரேபியா அரசு, அமுதாவின் உடலை தாயகம் அனுப்பி வைக்க உத்தரவிட்டது. அதன்பேரில், அவரது உடல் விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. திருச்சி திமுக அயலக அணி பொறுப்பாளர் சவுக்கத்அலி, காதர் மொய்தீன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் உடலை பெற்று அமுதாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடலை கோவைக்கு எடுத்துச் செல்ல இவலச ஆம்புலன்சும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அமுதாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர் அவர்களுக்கு நன்றி கூறியதோடு உடலை கோவைக்கு எடுத்துச் சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்