Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள குடோனில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொம்மைகள் நாசம்…!

திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள விஸ்வாஸ் நகர் முதல் தெருவில் வட மாநிலத்தவரின் பிளாஸ்டிக் பொம்மை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணை த்து வருகின்றனர். இருந்தாலும் தீ கட்டுக்குள் வராததால் மேலும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முழுவீச்சாக நடந்து வருகின்றன. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்