திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, ஆலங்குடி மகாஜனம் கிராமத்தைச் சேர்ந்த போசங்கு மகன் இளம்பரிதி (34). இவருக்கு யோகப் பிரியா (33) என்கிற மனைவியும், இனியன் (6), இமையன் (3) என்ற (2) மகன்கள். தற்போது இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு(05-07-2024) திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டனர். காரை, இளம்பரிதி ஓட்டினார். இன்று அதிகாலை 4 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே திருவளக்குறிச்சி பிரிவு சாலையில் வந்தபோது முன்னால் சென்ற வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே யோகப்பிரியா இறந்தார். இளம்பரிதி, இனியன் (6), இமையன் (3) மற்றும் அவரது உறவினர் திண்டுக்கல் மாவட்டம் புதூரை தங்கபாண்டி (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாகச் சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் உயிரிழந்த யோகபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
Comments are closed.