திருவெறும்பூர் அருகேயுள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவர் கைலாஷ் நகர் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (எ) வெங்கடேஷ் (27) மற்றும் அவரது நண்பரும் திருவெறும்பூர் மலைக்கோவில் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவருமான தமிழழகன் (48) மற்றும் அவர்களது நண்பரொருவர் என மூன்று பேர் ஆறுமுகத்திடம் பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், வழக்குப் பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார், விஷ்ணு (எ) வெங்கடேசன் மற்றும் தமிழழகன் ஆகிய இருவரையும் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களது மூன்றாவது நண்பர் ஒருவரை தேடி வருகின்றனர்.

Comments are closed.