திருச்சி பால்பண்ணை சர்வீஸ் ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த போது நான்கு பேர் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.போலீசார் வருவத்தை தூரத்தில் பார்த்தவுடன் அனைவரும் அங்கிருந்து ஓட முயன்றனர். அப்பொழுது அவர்களில் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல்சாதிக் (வயது 23) என்பது தெரிய வந்தது.மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, இந்த கும்பல் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்துல் சாதிக்கிடமிருந்து 2 ஆயிரம் போதை மாத்திரைகள், மற்றும் செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.