தமிழ்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நிதியான ரூ. 2152 கோடியை உடனே வழங்க வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்கள் 40 லட்சம் பேரின் எதிர்காலத்தோடு அரசியல் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் மீது தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும்.தமிழ்நாட்டின் மீது முன்மொழிக் கொள்கையை திணிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் இன்று ( பிப்.23 ) திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பேட்ரிக் ரெய்மாண்ட் தலைமை வகித்தார். அர்ஜீன் வரவேற்றுப் பேசினார். அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சிகரம் சதீஷ்குமார் கண்டன உரையாற்றினார் இந்த ஆப்பாட்டத்தில் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியா சங்கம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நலச்சங்கம், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன். மாணவர்களுக்கான சிறப்பாசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அலகுமாறுதல் பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கல்வித்துறை தட்டச்சர்கள் சங்கம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம், மாதிரிப்பள்ளி ஆசிரியரல்லாத பணியாளர்கள் சங்கம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பராமரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியர்கள் சங்கம், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கெளதமன் சேசுராஜா நன்றி கூறினார்.
Comments are closed.