Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை இனி செயலி மூலம் செலுத்தலாம்- ஆணையர் வே.சரவணன்…!

இன்று நாம் வாழும் இயந்திர உலகில் எங்கு சென்றாலும் நமக்கு கை கொடுப்பது கைபேசி என்றால் மிகை ஆகாது. இன்றைக்கு பெரும்பாலான தகவல்கள், பணப்பரிவர்த்தனை கைபேசி மூலமே பரிமாறப்படுகின்றன. அந்தவகையில் திருச்சி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த, வேண்டிய அனைத்து வரிகளையும் UPI செயலி மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், புதைவடிகால் சேவைக் கட்டணம் சம்பந்தமான அனைத்து வரி இனங்களையும் Google pay, Paytm, PhonePe ஆகிய செயலியை பயன்படுத்தி தமிழ்நாடு அர்பன் இசேவை முனிசிபல் டேக்ஸ் (Tamil Nadu Urban eSevai Municipal Tax) மூலம் எளிய முறையில் செலுத்தலாம். மேலும், மாநகராட்சி அனைத்து வார்டுகுழு அலுவலகங்களில் அமைந்துள்ள வரி வசூல் மையங்களில் நேரிலும் வரிகளை செலுத்தலாம். வரித்தொகைகளை உரிய காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்