Rock Fort Times
Online News

திருச்சி திராவிட பண்ணை டி.வி.முத்துகிருஷ்ணன் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!

திருச்சி திராவிட பண்ணை டி.வி.முத்துகிருஷ்ணன் இல்ல திருமணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருச்சி புத்தூர் பகுதி எம்.ரவீந்திரன்- கமலா தம்பதியரின் மகனும், திருச்சி கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளருமான இன்ஜினியர் மு.ர.முத்து தீபக் க்கும், அரியலூர் மாவட்டம் எம்.பாண்டித்துரை- நாகவேணி தம்பதியரின் மகள் பா.ஜனனி அர்ச்சனாவுக்கும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே உள்ள சிதம்பரம் மஹாலில் இன்று (19- 02- 2025) புதன்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். மாநகர கழக செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன் வரவேற்று பேசினார். இதில் கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்- அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக கழக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி என்.சிவா எம்.பி., திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் பி.அப்துல் சமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருமண விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், ஒன்றிய ,பகுதி கழக செயலாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, அணிகளின் அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட கழக செயலாளர்கள் , மாவட்ட, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள், மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முடிவில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.வெங்கடேஷ் குமார் நன்றி கூறினார். திருமண விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மா.பாண்டித்துரை- நாகவேணி, ச.சதீஷ்குமார்- கீர்த்திகா, பா. ஹரிஷ்வரன் மற்றும் எம்.ராஜேந்திரன்- சாந்தி, எம்.ரவீந்திரன்- கமலா, ஆர். கௌதம்- சிந்துஜா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்