திருச்சியில் ருசிகரம்: ரூ.25 ஆயிரத்துக்கு பத்து ரூபாய் நாணயங்களாக எடுத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்…!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக மற்றும் அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். அதோடு தேர்தலில் போட்டியிட சுயேச்சைகள் சிலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில் இன்று(26-03-2024) சுயேச்சை வேட்பாளர் ராஜேந்திரன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மூட்டையாக கட்டி எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, பத்து ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க வேண்டும் என்று எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஒரு சில கடைகளில் வாங்க மறுக்கின்றனர். கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.