Rock Fort Times
Online News

டெல்லியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் போராட்டம்…!

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு இப்போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று(24-04-2024) காலை திடீரென பெண்கள் உள்பட சில விவசாயிகள் அங்குள்ள செல்போன் டவர் மீதும், மரத்தின் மீதும் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். பின்னர், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்