திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட பேரூராட்சிகளின் இணை ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் செயல்பட்டுவரும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகை அமைத்திட வலியுறுத்தப்பட்டது. காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையிலும், பேரூராட்சி தலைவர் சு.சங்கீதா மற்றும் துணைத்தலைவர் சி.சுதா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் அரசு அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், மதவழிபாட்டு தளங்கள் ஆகியவற்றில் 50 சதவீதம் தமிழிலும், 30 சதவீதம் ஆங்கிலத்திலும் மற்றும் 20 சதவீதம் பிறமொழியிலும் அமையும் விதத்தில் பெயர் பலகை அமைத்திட வலியுறுத்தப்பட்டது.மேலும் இக்குறிப்பிட்ட இடங்களுக்கு நேரில் சென்று அதற்கான அறிவிப்பு கடிதங்களை வழங்கி உரிய விதிமுறைகளின் படி பெயர் பலகை, நிறுவனங்களின் விளம்பர பலகைகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவிப்புகள் ஆகியவற்றை ஆட்சி மொழியான தமிழில் முழுமையாக செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சியின் இளநிலை உதவியாளர்கள் இராஜேந்திரன், சித்ரா, பாரதியார், பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Post