தமிழ்நாடு திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் இன்று(24-9-2023) நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் செயல் அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சம்பத்குமார் மற்றும் அருள்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், மாநில பொருளாளர் முத்து ராமன், தலைமை நிலைய செயலாளர் முரளி, மாநில ஒருங்கிணைப்பாளர் கணபதி முருகன் , மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி மற்றும் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். . காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் செயல் அலுவலர்களின் பதவி உயர்வு, பணிஇட மாறுதல் போன்றவற்றை செய்து தர காலதாமதம் செய்வதை கண்டிப்பது என்பது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மண்டல செயல் அலுவலர்கள் செய்திருந்தார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.