தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரகுபதிக்கு கடந்த சில நாட்களாக இதயத்தில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், அதை ஆஞ்சியோ மூலம் சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அமைச்சர் ரகுபதியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
Comments are closed.