தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்.17-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: “பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 17-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். 2026-27 க்கான முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவு மானிய கோரிக்கை 20-ஆம் தேதி வாசிக்கப்படும். சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பதற்கான முடிவு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் செய்யப்படும். சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்” என்று அவர் கூறினார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடைசி கூட்டத் தொடர் என்பதால், சில முக்கிய அறிவிப்புகள் இந்த கூட்டத் தொடரில் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விவசாய கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்டவை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் உள்ளது.

Comments are closed.