Rock Fort Times
Online News

மழை வெள்ள மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டுள்ளது: மத்திய குழு பாராட்டு!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் பெருத்த சேதத்திற்கு உள்ளாகின. இந்த பாதிப்புகளை பார்வையிட 6 உயர் அதிகாரிகள் அடங்கிய மத்திய குழு டெல்லியில் இருந்து நேற்று தமிழகம் வந்தது. இந்த குழுவினர் இன்று ( 12.12.2023 ) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் புயல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர், மத்திய குழுவினர் 2-ஆக பிரிந்து, ஒரு பிரிவினர் வடசென்னை பகுதியிலும், இன்னொரு பிரிவினர் தென்சென்னை பகுதியிலும் ஆய்வு செய்கின்றனர்.

இந்த ஆய்வின்போது மத்திய குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். ஆய்வுக்கு இடையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய குழுவின் தலைமை அதிகாரி கூறியதாவது:-

2015-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம். பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள். 3 நாட்கள் களப் பார்வைக்கு பிறகு அறிக்கையை சமர்ப்பிப்போம். புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிக சிறப்பாக கையாண்டுள்ளது. மழை அதிகமாக பெய்ததால், தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களும் முழுமையாக மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்