அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் மலர் தூவி மரியாதை…!
சட்டமேதை அம்பேத்கர் 135- வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி இபி ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையிலும், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன், கோட்டத் தலைவர் சம்சுதீன், மூத்த தலைவர்கள்ளத்தெரு குமார் ஆகியோர் முன்னிலையிலும்
மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் அண்ணாசிலை விக்டர், பாலக்கரை மாரியப்பன், கோட்ட துணை தலைவர் நியூ லுக் யாசிர், மலைக்கோட்டை சொக்கலிங்கம், சேகர், தாகூர்தெரு முருகன், திருவானைக்காவல் தியாகராஜ நாயுடு, உறையூர் மகாராஜா, சிந்தை வீரா, என்ஜிஓ பிரிவு தலைவர் திருகண்ணன், நிர்மல்குமார், கிருஷ்ணமூர்த்தி, கோகுல், அரவிந்தன், சுபாஷ், தாராநல்லூர் சுந்தர், மணி, விக்கி, இபிரோடு ராஜீவ் காந்தி, சண்முகம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Comments are closed.