தமிழக சட்டமன்ற தேர்தல்: குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் திட்டம்…!
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் அனைவரும் வாக்களிக்கும் வகையில் இந்த முறை அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல்
வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பெரும்பாலான குடியிருப்புகளில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் உடல்நல குறைபாடுள்ளவர்கள் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை. எனவே, இதுபோன்றோரின் வசதிக்காகவும், சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையிலும் தேர்தல் ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குழு
வீட்டு வசதி சங்க வளாகங்களுக்குள்ளேயே வாக்குச்சாவடி வசதிகளைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்களை தேர்ந்தெடுத்து, அங்கே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 5, திருவள்ளூரில் 4, காஞ்சிபுரத்தில் 2, மதுரையில் 1, செங்கல்பட்டில் 2 என மொத்தமாக 14 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Comments are closed.