Rock Fort Times
Online News

தமிழ் திரைப்பட நடிகா் சத்யராஜின் தாயாா் காலமானாா்…

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக இன்று ( 11.08.2023 ) காலமானார். சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94) கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும் மற்றும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரண்டு மகள்களும் இருக்கின்றனர். தகவல் அறிந்தவுடன் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார். தாயை இழந்து வாடும் நடிகர் சத்யராஜ் குடும்பத்தினருக்கு, ராக்போர்ட் டைம்ஸ் – செய்திகுழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்