தமிழ் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த நாள் சூரசம்ஹாரமாகும். தீமையை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய நிகழ்வாக கருதப்படும் இதுவே முருக வழிபாட்டின் உச்சமாகக் கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில், தீபாவளிக்குப் பிறகு வரும் அமாவாசை பிரதமை தொடங்கி சஷ்டி வரை நடைபெறும். அந்தவகையில் முருக பெருமான் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) சூரசம்ஹாரம் விழா நடக்கிறது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சாமிக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், பூஜை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயில் அடிவாரம் கீழ ரத வீதியில் சூரசம்காரம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண உள்ள நிலையில் பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.