Rock Fort Times
Online News

கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பலி – காப்பாற்ற முயன்ற 3 பேர் உயிரிழப்பு…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 மாணவர்கள் நிலை தடுமாறி அங்குள்ள கிணற்றில் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற அருகில் இருந்த 3 பேர் கிணற்றில் குதித்தனர். கிணற்றில் விழுந்த 3 மாணவர்களில் 2 பேர் காப்பாற்றப்பட்டனர். ஆனால் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மாணவர்களை காப்பாற்ற முயன்ற 3 பேரும் மூச்சு திணறி உயிரிழந்தனர். மாணவர்களை காப்பாற்ற முயன்ற 3 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்