Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகையின்போது கலப்பட , காலாவதி இனிப்புகளை விற்றால் கடும் நடவடிக்கை…

திருச்சி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை..

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார வகைகள், நிரந்தர மற்றும் தற்காலிகத் தயாரிப்பு விற்பனை செய்பவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று ( 17.10.2023 ) திருச்சியில் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்த தீபாவளி பண்டிகையின் போது பழைய இனிப்பு வகைகளை விற்பனை செய்யக் கூடாது.
குறிப்பாக காலாவதி தேதியை சரியாக பார்த்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். தயாரிப்பாளர்கள் புற்றுநோயை வரவழைக்கக் கூடிய கலரிங் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உற்பத்தி மற்றும் காலாவதி தேதியில்லாத பொருட்களை விற்பனை செய்ய கூடாது. கலப்பட இனிப்பு வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் யாராவது கையூட்டு கேட்டால் தைரியமாக நீங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்