Rock Fort Times
Online News

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை…!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்பு பணிகளை பள்ளி கல்வித்துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் மாணவர்களுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென அனைத்து பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அப்போது தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கரிமங்கலம் வட்டாரம், ராமியாம் பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கே. பாலாஜி பள்ளிக்கு வராமல் மாற்று வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் பாலாஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  இந்தநிலையில் பள்ளிகளுக்கு வராமல் வேறு நபர்களை அமர்த்தி வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கு வராமல் வேறொரு நபரை வேலைக்கு நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரியான தகவல்களை தராமல் இருந்தால் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்