திமுக எம்எல்ஏ பழனியாண்டி குடும்பத்தினர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிய ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் ஆர்.மனோகரன்!
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் பழனியாண்டி. திமுக சார்பில் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட தலைமை கழகத்திடம் விருப்ப மனு அளித்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.மாறாக, எஸ்.துரைராஜ் என்பவருக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர்.மனோகரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று 03-04- 2026 காலை 10- 45 மணி முதல் 11 மணிக்குள் பழனியாண்டி எம்எல்ஏ வீட்டுக்கு சென்ற அதிமுக வேட்பாளர் மனோகரன், அங்கிருந்த எம்எல்ஏ குடும்பத்தினரின் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து ஆசி பெற்றார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்து வரும் மு.பரஞ்சோதி வீட்டுக்குகூட செல்லாத ஆர்.மனோகரன் திடீரென திமுக எம்எல்ஏ வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆசி பெற்றது கட்சி நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நேரம் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவர் இதுபோல நடந்து கொண்டு இருப்பாரா ? தற்போதுள்ள அதிமுக தலைமை மீது அவருக்கு துளியும் மரியாதையும், பயமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என இரட்டைஇலை கட்சி நிர்வாகிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Comments are closed.