Rock Fort Times
Online News

மகர விளக்கு பூஜைக்காக கொல்லம்- சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை(15-01-2024) மாலை நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதற்கொண்டு பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்காக கொல்லம்- சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இந்த சிறப்பு ரயிலானது, (06032/06031) வருகிற 16-ஆம் தேதி காலை 3 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை வந்து சேரும். இங்கிருந்து அன்று இரவு 11-45 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் கொல்லம் சென்றடையும்.இந்த ரயிலானது பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்