Rock Fort Times
Online News

கஸ்டடியில் இருக்கும் அமைச்சருக்கு ‘சிறப்பு அழைப்பாளர்’ போஸ்டர்….!

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வருகிற 12-ம் தேதி வரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கும் நிலையில் கரூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் ‘சிறப்பு அழைப்பாளர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கஸ்டடியில் இருக்கும் நிலையில் அவர் எப்படி வெளியே வர முடியும்? , விளையாட்டு போட்டியை எப்படி தொடங்கி வைக்க முடியும்? , இந்த போஸ்டர் எதன் அடிப்படையில் அச்சிடப்பட்டது என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்