Rock Fort Times
Online News

திருச்சியில் சோனியாகாந்தி கல்வெட்டு உடைப்பு…! காங்கிரஸ் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு…

திருச்சி ஜங்ஷன் கோட்டம் பீமநகர் செடல் மாரியம்மன் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே காங்கிரஸ் கொடியுடன் சோனியா காந்திக்கு கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டினை மா்ம நபா்கள் சிலா்  இடித்து விட்டனர். இது குறித்து சேவாதள மாநில பொதுச் செயலாளர் ஜெகதீஸ்வரி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம்.சரவணன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மாவட்ட பொது செயலாளர் ஆடிட்டர் சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காசிம் மற்றும் சிங்காரவேல், வீரேஸ்வரம் சங்கர், சேவாதள மாவட்டத் தலைவர் அப்துல் குத்தூஸ், வார்டு தலைவர் கருப்பு கண்ணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி பாலக்கரை போலீசில் புகார் அளித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்