Rock Fort Times
Online News

விற்றுத் தீர்ந்த த.வெ.க. விருப்ப மனுக்கள்..!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று(06.02.2026) முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணிக்கு முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர். விருப்ப மனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் சுமார் 2.30 மணி நேரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விருப்ப மனுக்கள் காலியானதைத் தொடர்ந்து, தொண்டர்கள் வருகையை தவிர்க்கவும்; ஏற்கனவே கூடியவர்கள் அங்கிருந்து புறப்பட ஏதுவாகவும் த.வெ.க. தலைமை அலுவலகத்தை அக்கட்சி நிர்வாகிகள் பூட்டி தொண்டர்களை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்