Rock Fort Times
Online News

அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டுமா?-

இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுகோள்...

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 450 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்காக தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அரசு இடஒதுக்கீட்டின் கீழ் சேரக்கூடிய மாணவர்கள் இன்று(06-05-2024) முதல் ஜூன் 6ம் தேதி வரை www.tneaonline.org, www.dte.gov.in எனும் இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். ОС, ОВС, BC, BCM, MBC, DNC பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி எஸ்.டி.பிரிவினருக்கு ரூ.250 பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையங்களிலும் மாணவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்