சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரோகித்ராஜ். சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர்மீது மயிலாப்பூர் ரவுடி சிவக்குமார் கொலை உள்பட
3 கொலை வழக்குகள் உள்ளன. மேலும், அடிதடி, மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், ரவுடி ரோகித் ராஜ் தேனியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சென்னை போலீசார் தேனி சென்று அங்கு பதுங்கி இருந்த ரோகித் ராஜை கைது செய்தனர். அங்கிருந்து அவர், சென்னை அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வழக்கு தொடர்பாக ரவுடி ரோகித்தை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இடங்களுக்கு போலீசார் இன்று(13-08-2024) அதிகாலை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சேத்துப்பட்டு பகுதியில் விசாரணை நடத்திக்
கொண்டிருந்தபோது போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி ரோகித்ராஜ் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில், காலில் காயமடைந்த ரோகித் ராஜை போலீசார் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 949
Comments are closed.