திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மது ஒழிப்பு மாநாட்டை நடத்த உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், மது ஒழிப்பு கொள்கையில் ஈடுபாடு உள்ள கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

இந்த நிலையில் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்து பின்னர் நீக்கி உள்ளார். அந்த வீடியோவில், “ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு… கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.