திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்றும் உள்ளது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸி சகாயராணி என்பவர் இருந்து வந்தார். இந்த நிலையில் கிரேஸி சகாய ராணியின் மகனும், லால்குடி அரசு மருத்துவருமான சாம்சன் என்பவர் அடிக்கடி குழந்தைகள் விடுதிக்கு சென்று 6 மாதங்களாக அங்கு தங்கி உள்ள குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விசாரித்த திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரான விஜயலட்சுமி, இந்த விவகாரம் குறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சாம்சன், சகாயராணி மீது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட மூன்று பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்த அரசு மருத்துவர் சாம்சனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு பொது சுகாதாரத்தை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.